sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

/

சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை


ADDED : செப் 11, 2025 11:04 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு:சாமுண்டி மலையின் தேவிகெரே கட்டே மற்றும் தாவரகெரே குடியிருப்பு பகுதியில், சிறுத்தை நடமாடுவதால், மாலை 6:00 மணி முதல் காலை வரை போக்குவரத்துக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, வனத்துறை வெளியிட்ட அறிக்கை:

சாமுண்டி மலையின் வேவிகெரே கட்டே மற்றும் தாவரகெரே குடியிருப்புப் பகுதியில், சில நாட்களாக சிறுத்தை நடமாடுகிறது. மலையின் சுற்றுப்பகுதிகளில் அதன் நடமாட்டம் தென்படுகிறது.

இதை சிலர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பொது மக்கள் பயப்பட தேவையில்லை. சாமுண்டி மலையில் வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடிக்க, இரவு ரோந்தில் ஈடுபடுகின்றனர். தகவல் தெரிந்தால் உடனடியாக மக்களிடம் தெரிவிப்போம். இருள் சூழ்ந்த பின், யாரும் வெளியே வர வேண்டாம்.

சாமுண்டி மலை வனப்பகுதி சுற்றளவு 17 கி.மீ., ஆகும். இதற்கு நான்கு கேட்கள் உள்ளன. ஹொச ஹுன்டியில் இருந்து, சாமுண்டி மலையின் கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையில், மாலை 6:00 மணி முதல், காலை 6:00 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளை வெளியே விடாதீர்கள். வீட்டின் சுற்றுப்பகுதிகளில் புதர்கள் இ ருந்தால், உடனடியாக அகற்றுங்கள். ஒருவேளை புதரில் சிறுத்தை இருப்பது தெரிந்தால், அருகில் செல்லாதீர்கள். வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொள்ளுங்கள். சிறுத்தையை சீண்டவோ, விரட்டவோ முயற்சிக்காதீர்கள். வனத்துறைக்கு தகவல் கொடுங்கள்.

சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால், 97401 17319 மற்றும் 94819 90930 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us