/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சந்தன மரங்களை பயன்படுத்த வாய்ப்பு விவசாயிகளுக்கு வனத்துறை நற்செய்தி
/
சந்தன மரங்களை பயன்படுத்த வாய்ப்பு விவசாயிகளுக்கு வனத்துறை நற்செய்தி
சந்தன மரங்களை பயன்படுத்த வாய்ப்பு விவசாயிகளுக்கு வனத்துறை நற்செய்தி
சந்தன மரங்களை பயன்படுத்த வாய்ப்பு விவசாயிகளுக்கு வனத்துறை நற்செய்தி
ADDED : ஜூன் 05, 2025 11:13 PM

மைசூரு: ''தாங்கள் விளைவிக்கும் சந்தன மரங்களை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்,'' என, மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் விவசாயிகள் சந்தன மரங்களை வளர்க்கின்றனர். ஆனால் அவர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.
இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இன்னும் 10 நாட்களில் திருத்தப்பட்ட, புதிய சந்தன மர கொள்கை வெளியிடப்படும்.
இதன்மூலம் தாங்கள் வளர்க்கும் சந்தன மரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படும்.
வருவாய் துறையின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களில், சந்தன மரம் வளர்ப்பது குறித்து வனத்துறை ஆலோசித்து வருகிறது.
ராணுவம், போலீஸ் துறையில் பணியாற்றுவோர் குடும்பத்தினர் பொருட்கள் வாங்க கேன்டீன்கள் உள்ளது போன்று, வனத்துறையில் பணியாற்றுவோர் குடும்பத்தினரும் பொருட்களை வாங்க, கேன்டீன்கள் அமைக்க வேண்டும் என்று, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்துள்ளது. இதை குறைக்க வன எல்லைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன.
நாட்டிலேயே அதிகபட்சமாக கர்நாடகாவில் 6,395 யானைகள் உள்ளன. புலிகள் எண்ணிக்கையிலும் நம் மாநிலம் 2வது இடத்தில் உள்ளது.
வனப்பகுதியை அதிகரிக்க அரசு தீவிரம் காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 15,000 ஏக்கர் நிலம் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுதும் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான 128 ஏக்கர் வன ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.