கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக முன்னாள் எம்.பி., ஹரிஷ் திவேதி நியமனம்
கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக முன்னாள் எம்.பி., ஹரிஷ் திவேதி நியமனம்
ADDED : செப் 24, 2026 12:32 AM

பெங்களூரு: கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த, முன்னாள் எம்.பி., ஹரிஷ் திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக பா.ஜ.,வின் மேலிட பொறுப்பாளராக, கடந்த 2024ல்லோக்சபா தேர்தலில் இருந்து பணியாற்றியவர் ராதாமோகன் தாஸ் அகர்வால், 71. இவருக்கும், கர்நாடக பா.ஜ., உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீராமுலுவுக்கும் ஏற்பட்ட மோதல், கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலிட பொறுப்பாளர் சரியாக பணியாற்றவில்லை என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் புகார் கூறினர். இதனால் தன்னை பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்க, ராதாமோகன் தாஸ் அகர்வால், கட்சி மேலிடத்திற்கு கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்று கொண்ட மேலிடம், கர்நாடக பா. ஜ., மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து, ராதாமோகன் தாஸ் அகர்வாலை விடுவித்துள்ளது.
புதிய மேலிட பொறுப்பாளராக, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் திவேதி, 52, இணை பொறுப்பாளராக தெலுங்கானா மாநிலத்தின் டாக்டர் காசம் வெங்கடேஸ்வரலு, 55, ஆகி யோர் நேற்று நியமிக்கப்பட்டனர்.
ஹரிஷ் திவேதி இரண்டு முறை எம்.பி.,யாக இருந்தவர். தற்போது கட்சியின் தேசிய செயலராக உள்ளார். காசம் வெங்கடேஸ்வரலு, தெலுங்கானா மாநில பா.ஜ., செயலராக ப ணியாற்றுகிறார்.
வரும், 2028 சட்டசபை தேர்தலை கருதி, இளம் தலைவரான ஹரிஷ் திவேதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக, பா.ஜ., வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
