தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உப்பு பாக்கெட்டுகள் மீது எச்சரிக்கை ஸ்டிக்கர்கள்

 உப்பு பாக்கெட்டுகள் மீது எச்சரிக்கை ஸ்டிக்கர்கள்

 உப்பு பாக்கெட்டுகள் மீது எச்சரிக்கை ஸ்டிக்கர்கள்


ADDED : செப் 24, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு பிரச்னைகள் அதிகரிக்கிறது. எனவே, பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருதி, உப்பு பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரின், விதான் சவுதாவில் சுகாதாரத்துறை அமைச்சர் காதர் தலைமையில், தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி கூட்டம், நேற்று முன் தினம் நடந்தது. உணவில் உப்பு அளவை குறைக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டது.

பின், அமைச்சர் காதர் கூறியதாவது:

உணவில் அபாயமான அம்சங்களை கட்டுப்படுத்துவதன் மூலம், நோய்களை தடுக்க அரசு முடிவு செய்துள்ளது. சமீப ஆண்டுகளாக மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு அதிகரிக்கிறது. உணவில் அதிகமான உப்பை சேர்ப்பதே, இதற்கு காரணம். சர்க்கரையும் நோய்களுக்கும், உப்பே காரணமாகிறது.

இதற்கு முன் அரசு சார்பில், மானிய விலையில் உப்பு, சர்க்கரை வழங்கப்பட்டது. நான் சுகாதாரத்துறை அமைச்சரான பின், சர்க்கரை, உப்பு வழங்குவதை நிறுத்திவிட்டேன்.

வீடுகள், ஹோட்டல்கள், பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட் உணவு பொருட்களில். அதிகமாக சேர்க்கப்படுகிறது. உப்பை சரியான அளவில் பயன்படுத்துவது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும் உப்பு உற்பத்தி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிகரெட், மதுமானம் உடல் ஆரோக்கியத்துக்கு அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இவைகளின் பாக்கெட்டுகளின் மீது, 'ஆரோக்கியத்துக்கு தீங்கை விளைவிக்கும்' என, அச்சிடப்பட்டுள்ளது.

அதுபோல, உப்பு பாக்கெட்டுகளின் மீதும், 'ஆரோக்கியத்துக்கு அபாயமானது' என, ஸ்டிக்கர் ஒட்டுவது குறித்து, அரசு பரிசீலிக்கிறது. இதனால் உப்பு பயன்படுத்தும் போது, எச்சரிக்கையாக இருப்பர்.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உட்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

பொதுமக்களின் நலனை கருதி, அனைத்து உப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us