/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் நடுரோட்டில் குத்தி கொலை
/
பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் நடுரோட்டில் குத்தி கொலை
பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் நடுரோட்டில் குத்தி கொலை
பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் நடுரோட்டில் குத்தி கொலை
ADDED : ஏப் 21, 2025 05:03 AM

கார்வார்: கார்வார் டவுன் சிட்டகுலி பகுதியில் வசித்தவர் சதீஷ் கோலங்கர், 62. பா.ஜ., பிரமுகரான இவர், கார்வார் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர். பிரபல ரவுடியான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். நேற்று காலை 6:00 மணிக்கு கார்வார் டவுனில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு வந்த இரண்டு பேர் சதீஷிடம் தகராறு செய்து, அவரை தாக்கினர். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். சதீஷ், ரத்தவெள்ளத்தில் நடுரோட்டில் சரிந்து விழுந்து இறந்தார். சம்பவ இடத்திற்கு உத்தர கன்னடா எஸ்.பி., நாராயணா, கார்வார் டவுன் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
எஸ்.பி., நாராயணா அளித்த பேட்டியில், ''கொலை செய்யப்பட்ட சதீஷ் கோலங்கர் ரவுடி ஆவார். அவர் மீது 10 வழக்குகள் உள்ளன. கொலையாளிகள் யார் என்பதை அடையாளம் கண்டு உள்ளோம். விரைவில் கைது செய்யப்படுவர். தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்படவில்லை.
''பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்து உள்ளது. நிதேஷ், தர்ஷன் ஆகிய இருவர் மீது சதீஷ் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் விசாரிப்போம்,'' என்றார்.

