தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்., முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா மரணம்

 காங்., முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா மரணம்

 காங்., முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா மரணம்


ADDED : மே 30, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 02:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா, 80, மரணம் அடைந்தார்.

துமகூரின் பாவகடா தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடரமணப்பா, 80. வயோதிகத்தால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆனால் நேற்று காலை 5:45 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உயிர் காக்கும் கருவி மூலம் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பலன் அளிக்காமல் வெங்கடரமணப்பா இறந்து விட்டார்.

அவரது உடல் சொந்த ஊரான பாவகடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு பின், அடக்கம் செய்யப்பட உள்ளது.

கடந்த 1989, 1999 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற வெங்கடரமணப்பா, 2008 தேர்தலில் 'சீட்' கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.

அந்த நேரத்தில் பா.ஜ., ஆட்சி அமைய ஆதரவு கொடுத்ததன் மூலம், சிறு தொழில் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. பின், மீண்டும் காங்கிரசில் இணைந்து, 2018 தேர்தலில் வென்றார். காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் தொழிலாளர் நல துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த 2023 தேர்தலுக்கு முன் தனக்கு வயதாகி விட்டதால், மகன் வெங்கடேஷுக்கு 'சீட்' கொடுக்க, கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற காங்கிரஸ், வெங்கடேஷுக்கு சீட் கொடுத்தது. தற்போது அவர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us