/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இ- - வேஸ்டில் கலைவண்ணம் கண்ட 'மாஜி' பொறியாளர்
/
இ- - வேஸ்டில் கலைவண்ணம் கண்ட 'மாஜி' பொறியாளர்
ADDED : ஆக 10, 2025 02:47 AM

இ- - வேஸ்ட் எனும் எலக்ட்ரானிக் கழிவு பொருட்களை கொடுத்தால், அழகான உருவத்தை உருவாக்கி, ஆச்சரியப்படுத்துகிறார் முன்னாள் பொறியாளர் விஸ்வநாத் பல்லாபடி.
நெகிழ்ச்சியுடன் அவர் கூறியதாவது:
என் தந்தை சாம்பு, புகழ்பெற்ற சிற்பி, ஓவியர். நான் மருத்துவராக வேண்டும் என்பது அவரின் ஆசை. வேண்டாம் என துாக்கி வீசப்படும் பொருட்கள் மூலம் ஏதாவது ஒன்றை, சிறு வயது முதல் உருவாக்கி கொண்டே இருப்பேன்.
முதன்மை செயல் அதிகாரி கலைகளை மையமாக கொண்ட பி.எப்.ஏ., எனும் நுண்கலை இளங்கலை படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. 'விப்ரோ' நிறுவனத்தில் சேர்ந்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றினேன். பணி முடித்து வந்ததும், ஓய்வு நேரத்திலும், வார இறுதி நாட்களிலும் எலக்ட்ரானிக் வேஸ்டில் புதுமையாக எதையாவது உருவாக்கிக் கொண்டே இருப்பேன்.
கம்ப்யூட்டர்கள், மடிக்கணினி, டேட்டா கார்டுகள், டிவிடிக்கள், 'விசிஆர்'கள், பிளாப் டிஸ்குகள், செட்டாப் பாக்ஸ், பழைய தொலைபேசி, கார்ட்லஸ் போன் மற்றும் மருத்துவ சாதன பொருளான குளோமீட்டர்களையும் அக்கக்காக கழற்றி, மீண்டும் மாட்ட தெரியும்.
விளையாட்டுக்காக, உடைந்த எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து சிறு சிறு விலங்குகள் உருவத்தை உருவாக்கி வந்தேன். இ - வேஸ்ட்டால், சுற்றுச்சூழல் மாசடைவதை அறிந்தேன். இ - வேஸ்ட் மூலம் சுவர் ஓவியங்கள், சிற்பங்களை உருவாக்க துவங்கினேன்.
வெளிநாடுகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற நான், தற்போது இதையே தொழிலாக மாற்றி உள்ளேன். என் கலைப்படைப்பால் ஈர்க்கப்பட்டோருக்கு புதுடில்லி மட்டுமின்றி ஐரோப்பா, நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறேன்.
இதுவரை கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் உள்ள 'கீ'களை வைத்து, பெண்கள் அணியும் ஆடை உட்பட 500க்கும் மேற்பட்ட கலை பொருட்களை உருவாக்கி உள்ளேன். நகைகளை உருவாக்க, 2 முதல் 3 நிமிடங்கள் போதும். ஆனால், ஒரு உருவத்தை உருவாக்க ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை பணி செய்ய வேண்டும்.
இ- - வேஸ்ட்களை வாங்கும் டீலருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த வேஸ்ட்களில், சிற்பம் உருவாக்க முடியும் என்ற பொருட்களை மட்டுமே வாங்குவேன்.
கடந்த 2019 - 20ல் இந்தியாவில் மட்டும் 10.1 லட்சம் டன் இ- - வேஸ்ட்கள் உருவானது. இதில், 22.7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன. இதுவரை 300 கிலோவுக்கு அதிகமான இ- - வேஸ்ட்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாற்றி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

