/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போவி ஆணைய முறைகேடு முன்னாள் எம்.டி., கைது
/
போவி ஆணைய முறைகேடு முன்னாள் எம்.டி., கைது
ADDED : ஏப் 18, 2025 07:09 AM

பெங்களூரு: போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கில், முன்னாள் எம்.டி.,யை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது.
கர்நாடக அரசின் சமூக நலத்துறைக்கு உட்பட்ட போவி மேம்பாட்டு ஆணையத்தில், கடந்த பா.ஜ., ஆட்சியில் 97 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி., விசாரிக்கிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
கடந்த 4ம் தேதி பெங்களூரு வி.வி.டவரில் உள்ள போவி மேம்பாட்டு ஆணைய அலுவலகம் உட்பட 10 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின.
அதன் அடிப்படையில் போவி மேம்பாட்டு ஆணைய, முன்னாள் பொது மேலாளர் நாகராஜப்பா கடந்த 6ம் தேி கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் காவலில் எடுத்து, அமலாக்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றத்தில், போவி மேம்பாட்டு ஆணைய முன்னாள் எம்.டி., லீலாவதிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை கைது செய்தது. மருத்துவ பரிசோதனைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏழு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.