தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சித்தராமையா ராஜினாமா செய்ததை நினைத்து கண்ணீர் விட்ட முன்னாள் அமைச்சர்

 சித்தராமையா ராஜினாமா செய்ததை நினைத்து கண்ணீர் விட்ட முன்னாள் அமைச்சர்

 சித்தராமையா ராஜினாமா செய்ததை நினைத்து கண்ணீர் விட்ட முன்னாள் அமைச்சர்


ADDED : மே 30, 2026 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 02:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: சித்தராமையா ராஜினாமா செய்ததை நினைத்து, முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் கண்ணீர்விட்டு அழுதார்.

தாவணகெரேயில் நேற்று அவர் கூறுகையில், ''சித்தராமையா முதல்வராக இருந்த போது, எந்தவொரு ஜாதிக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாமல், அனைத்து ஜாதியினரையும் சமமாக நடத்தினார். அப்படிப்பட்ட ஒருவர் ராஜினாமா செய்தது வேதனை அளிக்கிறது,'' என்று கூறி, கண்ணீர் விட்டு அழுதார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

அரசியல்வாதியின் ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என்று சித்தராமையா காட்டி உள்ளார். எந்த பிரச்னையும் செய்யாமல் அவர் ராஜினாமா செய்தது, அவரது கவுரவத்தை உயர்த்தி உள்ளது. அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல என்பதை, சித்தராமையாவின் ராஜினாமா கற்று கொடுத்து உள்ளது.

சிவகுமார் முதல்வர் ஆவதற்கு எந்த தடையும் இருக்காது. அவரும் கட்சிக்காக நிறைய உழைத்து உள்ளார். இதை அங்கீகரிக்கும் வகையில், கட்சி மேலிடம் அவருக்கு முதல்வர் பதவி கொடுத்து உள்ளது.

அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி, 2028 தேர்தலிலும் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவோம்.

சதீஷ் ஜார்கிஹோளி திறமையான நபர் தான். அவர் கட்சியின் மாநில தலைவரானால் கட்சி வலுவடையு ம். புதிய அமைச்சரவை யில் யாருக்கு பதவி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

சித்தராமையாவை காங்கிரஸ் மோசமாக நடத்தி உள்ளது என்று, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார். அவர் தான் சில தினங்களுக்கு முன், சித்தராமையாவை விமர்சித்தார்.

காங்கிரஸ் ஒரு போதும் சித்தராமையாவை மோசமாக நடத்தவில்லை. பா.ஜ., தான் எடியூரப்பாவை மோசமாக நடத்தியது. அவரை கண்ணீருடன் ராஜினாமா செய்ய வைத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us