/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., ஆலோசனை குழுவில் 'மாஜி' அமைச்சர் ராஜண்ணா
/
காங்., ஆலோசனை குழுவில் 'மாஜி' அமைச்சர் ராஜண்ணா
ADDED : நவ 05, 2025 01:40 AM

பெங்களூரு: அனைத்திந்திய காங்கிரஸ் ஆதிவாசி பிரிவு ஆலோசனை குழுவில், முன்னாள் அமைச்சர் ராஜண்ணாவுக்கு இடம் கிடைத்துள்ளது.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் சிக்கியதால் நாகேந்திரா, ஓட்டுத் திருட்டு நடந்ததாக கூறும் ராகுலை விமர்சித்து பேசியதால் ராஜண்ணா ஆகியோர், தங்கள் அமைச்சர் பதவியை இழந்தனர். இருவரும் எஸ்.டி., சமூகத்தை சேர்ந்தவர்கள்.
தங்கள் சமூகத்திற்கு காங்கிரஸ் அநீதி இழைக்கிறது என்று, கட்சிக்குள் இருந்தே குரல் எழும்பியது. இதை சரிசெய்ய காங்கிரஸ் மேலிடம் முன்வந்துள்ளது. அனைத்திந்திய காங்கிரஸ் ஆதிவாசி பிரிவின் ஆலோசனை குழுவில், ராஜண்ணா, நாகேந்திரா உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, எம்.எல்.ஏ.,க்கள் கோபாலகிருஷ்ணா, ரகுமூர்த்தி, கணேஷ், எம்.பி.,க்கள் குமார் நாயக், துக்காராம், பிரியங்கா ஜார்கிஹோளி, முன்னாள் எம்.பி., உக்ரப்பா ஆகியோரும் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

