/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மோடி அரசியலில் இருக்கும் வரை போட்டியிடுவேன்'
/
'மோடி அரசியலில் இருக்கும் வரை போட்டியிடுவேன்'
ADDED : நவ 05, 2025 07:45 AM

'பிரதமர் நரேந்திர மோடி, அரசியலில் இருக்கும் வரை, நானும் தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு வயதாகவில்லை,'' என, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்தார்.
விஜயபுரா மாவட்டம், இண்டியில் கட்சி அலுவலகத்தில், இண்டி மண்டல தலைவராக ஹனுமந்தராய கவுடா பாட்டீல் பொறுப்பேற்றார். இவ்விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் ஜிகஜினகி பேசியதாவது:
இண்டி தாலுகாவில் பிறந்த என்னை, உங்கள் வீட்டை சேர்ந்த சகோதரன் போன்று ஆதரவு அளித்து டில்லி வரை அனுப்பினீர்கள். லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட்டபோது, இண்டி சட்டசபை தொகுதியில் அதிகளவில் ஓட்டு கள் எனக்கு வந்தன.
அதுவே சட்டசபை தேர்தலின்போது, நம் கட்சி வேட்பாளருக்கான ஓட்டுகள் குறைந்துவிடுகின்றன. இது ஏன் என்று பலரும் என்னை கேட்கின்றனர். என் பலத்தை குறைக்க விடாதீர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி, அரசியலில் இருக்கும் வரை, நானும் தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு வயதாகவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவது ஓட்டுக்காக அல்ல. மதச்சார்பற்ற மற்றும் தேசிய உணர்வோடு செயல்படும் ஒரே கட்சி பா.ஜ., தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -:

