/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்.,கில் ஐக்கியம் ஆனார் ம.ஜ.த., முன்னாள் அமைச்சர்
/
காங்.,கில் ஐக்கியம் ஆனார் ம.ஜ.த., முன்னாள் அமைச்சர்
காங்.,கில் ஐக்கியம் ஆனார் ம.ஜ.த., முன்னாள் அமைச்சர்
காங்.,கில் ஐக்கியம் ஆனார் ம.ஜ.த., முன்னாள் அமைச்சர்
ADDED : ஜூலை 11, 2025 11:01 PM

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில் ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் லலிதா நாயக், நேற்று காங்கிரசில் இணைந்தார்.
சமூக ஆர்வலர், எழுத்தாளர், அரசியல்வாதி, நடிகை என பன்முக தன்மை கொண்டவர் பி.டி.லலிதா நாயக், 80. நீண்ட காலமாக ம.ஜ.த.,வில் இருந்தவர். அமைச்சர், எம்.எல்.சி., பதவி வகித்துள்ளார்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க தேவகவுடா முடிவு செய்ததால், 2004ல் ம.ஜ.த.,வில் இருந்து விலகினார். பின், பல கட்சிகளில் இருந்தார். கடைசியாக ஆம் ஆத்மியில் இருந்தார்.
இந்நிலையில் ஆம் ஆத்மியில் இருந்து விலகி, துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில் லலிதா நாயக் நேற்று காங்கிரசில் இணைந்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பற்ற கொள்கை ஆகியவற்றுக்கு மரியாதை கொடுக்கும் பணியை காங்கிரஸ் மட்டுமே செய்துள்ளது. பசவண்ணரை கலாசார தலைவராக அறிவித்தது; அரசியமைப்பை பாதுகாக்க மாநாடு நடத்தியது காங்கிரஸ் அரசின் சாதனை.
நான் எதையும் எதிர்பார்த்து காங்கிரசுக்கு வரவில்லை. அதிகாரத்தை தேடினால் எதுவும் கிடைக்காது. விதை விதைத்தால் அதற்கு ஒரு நாள் நிச்சயம் பலன் கிடைக்கும்.
காங்கிரசை ஒரு சமூகத்திற்கு ஆதரவாக கட்சி என்று கூறி, எதிர்க்கட்சியினர் முத்திரை குத்த பார்க்கின்றனர். காங்கிரஸ் அரசின் 5 வாக்குறுதி திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.