/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார் விபத்தில் 'மாஜி' எம்.எல்.ஏ., காயம்
/
கார் விபத்தில் 'மாஜி' எம்.எல்.ஏ., காயம்
ADDED : பிப் 23, 2026 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாண்டியா: கார் விபத்துக்கு உள்ளானதில், ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா உட்பட இருவர் லேசான காயம் அடைந்தனர்.
மாண்டியா மாவட்டம் நாகமங்களா ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா. நேற்று முன்தினம் இரவு தனது கட்சி தொண்டரின் திருமணத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பொந்தேகொப்பலு அருகே செல்லும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடிய பல்டி அடித்தது. எம்.எல்.ஏ.,வும், ஓட்டுநரும் காயம் அடைந்தனர்.
இருவரும், மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இருவரும், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

