தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மீண்டும் அரசியலில் குதிக்கிறார் 'மாஜி' எம்.எல்.ஏ., ரோஷன் பெய்க்

 மீண்டும் அரசியலில் குதிக்கிறார் 'மாஜி' எம்.எல்.ஏ., ரோஷன் பெய்க்

 மீண்டும் அரசியலில் குதிக்கிறார் 'மாஜி' எம்.எல்.ஏ., ரோஷன் பெய்க்


ADDED : பிப் 11, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ரோஷன் பெய்க், மீண்டும் அரசியலில் குதிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ரோஷன் பெய்க். 2013 - 18ல் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தார். அதன் பின், 2018 - 23 தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது. இதனால், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில், ரோஷன் பெய்க்கிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதற்கிடையில், பா.ஜ., நடத்திய, 'ஆபரேஷன் தாமரை'யில் ரோஷன் பெய்க் உட்பட காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த.,வின் 17 எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சிகளில் இருந்து விலகினர். இதனால், அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இத்தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், சிவாஜிநகரில் போட்டியிட பா.ஜ.,வில் 'சீட்' கிடைக்கும் என்று ரோஷன் பெய்க் எதிர்பார்த்தார். ஆனால், ஐ.எம்.ஏ., என்ற நிதி நிறுவன மோசடியில் இவரின் பெயரை குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ., சேர்த்திருந்தது. அதனால், இவருக்கு தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இடைத்தேர்தலிலும் பா.ஜ., வேட்பாளர் தோல்வி அடைந்தார். இதனால், சில காலம் அரசியலில் ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில், டில்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி ஆகியோரை ரோஷன் பெய்க் சந்தித்தார்.

பின், அவர் கூறியதாவது:

உத்தரகண்ட், அசாம், உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. முஸ்லிம்களை நோக்கி அசாம் முதல்வர் துப்பாக்கியை நீட்டுகிறார். இதுபோன்ற நிலைமை உத்தரகண்டிலும், உத்தரபிரதேசத்திலும் உள்ளது.

எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக, நாட்டில் நல்லிணக்கத்தை பேணுமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளோம். இதற்காகவே, 'இந்திய முஸ்லிம் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்களுக்கான அமைப்பின்' முக்கிய முஸ்லிம் தலைவர்கள் குழுவினர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தோம். விரைவில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திப்போம்.

நான் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை., நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருந்தாலும், மெதுவாக அவற்றிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறேன். என் மாமா, பெரியப்பா மூலம் நான் அரசியலுக்குள் நுழையவில்லை. அரசியல் என் ரத்தத்தில் ஊறியது; மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் உள்ளேன்.

எதிர்காலத்தில் தீவிர அரசியலுக்கு வருவேன். அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன். எந்தக்கட்சி சார்பில் போட்டியிடுவேன் என்பதை பின்னர் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us