UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 11:26 PM
பெங்களூரு: மாருதி சேவா நகரில், 436 கோடி ரூபாயில் வட்ட வடிவிலான மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதல்வர் சிவகுமார் அடிக்கல் நாட்டினார்.
பெங்களூரு மாருதி சேவா நகர் ஐ.ஓ.சி., சந்திப்பு பகுதியில் எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையம் உள்ளது.
ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் வழியே பயணித்தால் கே.ஆர்., புரம், ராமமூர்த்தி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லலாம்.
இந்த மேம்பாலத்தின் அகலம் சிறியதாக இருப்பதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.
இதற்கு தீர்வு காணும் வகையில், மேம்பாலம் விரிவுபடுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று ஐ.ஓ.சி., சந்திப்பில் நடந்தது. இதில், முதல்வர் சிவகுமார், அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வட்டவடிவிலான மேம்பாலம் 436 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது.
