தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/7 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா ‘ரெய்டு’

7 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா ‘ரெய்டு’

7 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா ‘ரெய்டு’


UPDATED : நவ 19, 2026 12:00 AM

ADDED : நவ 18, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 12:00 AM ADDED : நவ 18, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த, ஏழு அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

தார்வாடில் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக டிரைவர் சடாக் ஷரய்யா, சித்ரதுர்கா மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவீந்திரா, சித்ரதுர்கா சட்ட அளவியல் துறை ஆய்வாளர் வெங்கடேசப்பா, பாகல்கோட் பஞ்சாயத்து ராஜ் துறை உதவி இயக்குநர் சஞ்சீவப்பா.

ஹாசன் வன சரக அதிகாரி ஹேமந்த் குமார், மைசூரு வன சரக அதிகாரி சுரேந்திர குமார், பீதர் பொதுப்பணி துறை அதிகாரி சதானந்த ஹர்வாட்.

மேற்கண்ட ஏழு அரசு அதிகாரிகளும் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது பற்றி, லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலையில் ஏழு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்கள், அலுவலங்கள், உறவினர்கள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அதிகாரிகள் வீடுகளில் இருந்து கட்டு, கட்டாக பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஏழு பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us