/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளிகளுக்கு புதிய கட்டடம் அடிக்கல்
/
பள்ளிகளுக்கு புதிய கட்டடம் அடிக்கல்
ADDED : செப் 05, 2025 04:48 AM
தங்கவயல்:தங்கவயல் நகராட்சியின் 9வது செல்லப்பா வார்டிலும், குப்பம் நெடுஞ்சாலையில் ராமர் கோவில் அருகிலும் சாலைகள் அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது.
பழைய மாரி குப்பம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம். கொத்துார் அரசு கன்னடப் பள்ளி வளாகத்தில் புதியதாக வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
அப்போது, ரூபகலா எம்.எல்.ஏ., பேசியது:
தங்கவயலில் உள்ள 14 கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வகுப்பு அறைகள் அவசியம் தேவை என்பதை பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வியின் அவசியத்தை, மாணவர்களின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டப்படும்.
இதன் தொடக்கமாக டி.கொத்துார் அரசுப் பள்ளியில் 14.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.