/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோவில் ராஜகோபுரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
/
கோவில் ராஜகோபுரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
ADDED : மே 09, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் நுாற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
ராஜகோபுரம் கட்ட 4.99 கோடி ரூபாயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை நாதஸ்வரம் இசை முழங்க தங்கவயல், மாலுார் சிக்க திருப்பதி கோவிலின் பூசாரிகள் நடத்திவைத்தனர்.
தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார், நகராட்சி தலைவர் இந்திரா காந்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.