/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாமியாரை கொன்று துண்டு போட்ட டாக்டர் மருமகன் உட்பட நால்வர் கைது
/
மாமியாரை கொன்று துண்டு போட்ட டாக்டர் மருமகன் உட்பட நால்வர் கைது
மாமியாரை கொன்று துண்டு போட்ட டாக்டர் மருமகன் உட்பட நால்வர் கைது
மாமியாரை கொன்று துண்டு போட்ட டாக்டர் மருமகன் உட்பட நால்வர் கைது
ADDED : ஆக 11, 2025 10:10 PM

துமகூரு : மாமியாரை கொலை செய்து, உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி சாலைகளில் வீசிய மருமகன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
துமகூரு மாவட்டம், கொரட்டகெரே தாலுகாவின், சிம்புகானஹள்ளியின் முத்தாலம்மன் கோவில் அருகில், கடந்த 7ம் தேதி, பிளாஸ்டிக் கவரில் வீசப்பட்ட மனித கை கிடந்தது. அதை, நாய் ஒன்று இழுத்துச் செல்வதை கவனித்த விவசாயி ஒருவர், அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த கொரட்டகெரே போலீசார், கையை மீட்டனர். எட்டு குழுக்கள் அமைத்து, சுற்றுப்பகுதிகளில் போலீசார் தேடினர்.
சிம்புகானஹள்ளியின் முத்தாலம்மன் கோவில் அருகில் இருந்து, சித்தரபெட்டா சாலை வரை, 30 கி.மீ., தொலைவுக்குள் 17 இடங்களில், கறுப்பு மற்றும் மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவர்களில் வீசப்பட்டிருந்த உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சாலைகளில் கிடைத்த அனைத்து உடல் உறுப்புகளும் ஒரு பெண்ணுக்கு சொந்தமானவை என்பது தெரிந்தது. அப்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
கொரட்டகெரே தாலுகாவில், காணாமல் போனவர்கள் பற்றிய தகவலை சேகரித்தனர். அப்போது மகளை பார்ப்பதற்காக சென்ற, பெள்ளாவி கிராமத்தில் வசித்த லட்சுமி தேவம்மா, 42, என்பவர், மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
அவர்களிடம் உடல் துண்டுகள், தலையை காண்பித்து அடையாளம் காட்டும்படி கூறியபோது, அது லட்சுமி தேவம்மா இல்லை என, குடும்பத்தினர் கூறினர். எனினும் போலீசார் டி.என்.ஏ., பரிசோதனை நடத்தினர். இதில், கொலையானது லட்சுமி தேவம்மா என்பது உறுதியானது.
அதன்பின் கொலையாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் ஈடுபட்டனர். லட்சுமி தேவம்மாவின் மருமகன் ராமச்சந்திரா, 30, மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாமியார் காணாமல் போன நிலையிலும், அவர் தர்மஸ்தலா சென்றிருப்பது நெருடலை ஏற்படுத்தியது.
தர்மஸ்தலாவுக்கு சென்ற போலீசார், கொரட்டகெரே போலீஸ் நிலையத்துக்கு ராமச்சந்திராவை அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்தபோது, மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பல் டாக்டரான ராமசந்திராவுக்கு, லட்சுமி தேவம்மாவின் மகளை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவ்வப்போது மகளை பார்க்க வந்த லட்சுமி தேவம்மா, விபசாரத்தில் ஈடுபட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என, மகளுக்கு நெருக்கடி கொடுத்தார். மகள் மறுத்தும் கேட்கவில் லை.
இது, மருமகன் ராமசந்திராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மாமியாரை கொலை செய்ய, நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். மகளை பார்க்க வந்த லட்சுமி தேவம்மாவை, கோளாலா அருகில் உள்ள பண்ணை வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
பின், உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் போட்டு, சாலைகளில் வீசியது, விசாரணையில் தெரிய வந்தது. ராமசந்திரா உட்பட, மற்ற 4 நண்பர்களை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.