தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கள்ளக்காதலுக்காக கணவர் அடித்துக்கொலை மனைவி உட்பட நால்வர் கைது

 கள்ளக்காதலுக்காக கணவர் அடித்துக்கொலை மனைவி உட்பட நால்வர் கைது

 கள்ளக்காதலுக்காக கணவர் அடித்துக்கொலை மனைவி உட்பட நால்வர் கைது


ADDED : பிப் 06, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்ததுடன், விபத்து என நாடகமாடிய மனைவியும், அவரின் கள்ளக்காதலர் உட்பட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட் தாலுகா, சித்தேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் அசோக், 40. இவரது மனைவி புஷ்பா, 35. ஜனவரி, 24ம் தேதியன்று, கிராமத்தின் அருகே சாலை திருப்பத்தில் அசோக் இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு வந்த சூலிபெலே போலீசார், உடலை மீட்டனர்.

கணவர் விபத்தில் இறந்ததாக, போலீசாரிடம் புஷ்பா தெரிவித்தார். ஆனால், கிராமத்தினருக்கு அசோக்கின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. அவரின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று கூறினர்.

போலீசாரும் பல கோணங்களில் விசாரித்த போது, புஷ்பாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், 35, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதன்பின் புஷ்பாவை தீவிரமாக விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த நாளன்று, தேவராஜ் தன் கூட்டாளிகள் சித்தப்பா, 37, மற்றும் முனீந்திரா, 35, ஆகியோருடன் சேர்ந்து, பார்ட்டி நடத்தலாம் என நம்ப வைத்து, அசோக்கை அழைத்து சென்றுள்ளனர்.

ஏரி அருகே இரும்புத்தடியால் அவரது மண்டையில் அடித்து கொலை செய்துள்ளனர். விபத்தில் அடிபட்டு இறந்ததாக காட்ட, உடலை அங்கேயே போட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து புஷ்பா, அவரது கள்ளக்காதலர் தேவராஜ், கூட்டாளிகளான சித்தப்பா, முனீந்திரா ஆகிய நால்வரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us