sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெளிநாடு சுற்றுப்பயணம் தயாராகும் எம்.எல்.ஏ.,க்கள்

 வெளிநாடு சுற்றுப்பயணம் தயாராகும் எம்.எல்.ஏ.,க்கள்

 வெளிநாடு சுற்றுப்பயணம் தயாராகும் எம்.எல்.ஏ.,க்கள்


ADDED : பிப் 06, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆய்வு என்ற பெயரில், 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல தயாராகின்றனர். ஆய்வறிக்கை தயாரித்து அரசிடம் தாக்கல் செய்வர்.

கர்நாடக கால்நடைத்துறை சார்பில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்ல தயாராகின்றனர். அவர்களுடன் அதிகாரிகளும் செல்வர். அந்நாடுகளில் கால்நடை வளர்ப்பு, விவசாயம் எந்த வகையில் செய்யப்படுகிறது. பால் உற்பத்தி மற்றும் விவசாய மேம்பாட்டுக்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் என்பதை ஆய்வு செய்வர்.

அந்த திட்டங்களை, கர்நாடகாவில் செயல்படுத்துவது குறித்து, அரசுக்கு எம்.எல்.ஏ.,க்கள் விரிவான அறிக்கை அளிப்பர். எந்தெந்த எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வர் என்பது குறித்து, விரைவில் தகவல் வெளியாகும் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும், பல முறை எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், எந்த பயனும் ஏற்படவில்லை. வெளிநாடு சுற்றுப்பயணம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அரசு பணத்தை வீணாக செலவிடக்கூடாது என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us