சாலை தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதியதில் நான்கு பேர் பலி
சாலை தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதியதில் நான்கு பேர் பலி
ADDED : மார் 24, 2026 06:14 AM

ராம்நகர்: பெங்களூரு அருகே, சாலை தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில், நான்கு பயணியர் உயிரிழந்தனர்.
பெங்களூரு தெற்கு மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா புட்டப்பனதொட்டி கிராமத்தில் நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு ஆம்னி பஸ் சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி, சாலை தடுப்பு சுவரில் மோதியது.
டிரைவர் பிரேக் போட முயன்றும் பஸ் நிற்கவில்லை. 100 மீட்டர் துாரம் இடதுபக்கம் தேய்த்து கொண்டே சென்று பஸ் நின்றது. இந்த விபத்தில் பஸ்சுக்குள் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, ஆர்.ஆர்.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னப்பட்டணா போலீசார் நடத்திய விசாரணையில், விபத்துக்கு உள்ளான பஸ், கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து பெங்களூரு சென்றதும், விபத்தில் சிக்கி கோழிக்கோட்டின் முகமது பரான், 22, ரபீஸ், 45, பெங்களூரு கலாசிபாளையாவின் ரஷீத், 45, ஆடுகோடியின் சாகிர், 27 ஆகியோர் இறந்ததும் தெரிய வந்தது. படுகாயம் அடைந்த அப்துல், அலெக்ஸ் ஆகியோர், கேரளாவின் கண்ணுாரை சேர்ந்தவர்கள். பஸ்சை டிரைவர் ரியாஸ், 38 துாக்க கலக்கத்திலும், வேகமாகவும் ஓட்டியதுமே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. ரியாஸ் கைது செய்யப்பட்டார்.
