/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரே குடும்பத்தில் நால்வர் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு
/
ஒரே குடும்பத்தில் நால்வர் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு
ஒரே குடும்பத்தில் நால்வர் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு
ஒரே குடும்பத்தில் நால்வர் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு
ADDED : ஜன 19, 2026 05:56 AM
ஷிவமொக்கா: பத்ரா கால்வாயில் மூழ்கி, ஒரே குடும்பத்தின் நால்வர் உயிரிழந்தனர்.
ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகாவின் பென்டேகட்டே கிராமத்தில் வசித்தவர் நீலாபாய், 50.
இவரது உறவினர்கள் பத்ராவதி தாலுகாவின் அரபிளசி கேம்ப் கிராமத்தில் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் மாரிகாம்பா கோவில் திருவிழா நடந்தது.
இதை பார்ப்பதற்காக, நீலா பாய் தன் மகன் ரவி, 23, மகள் ஸ்வேதா, 24, மருமகன் பரசுராம், 28, ஆகியோருடன் சென்றிருந்தார்.
நேற்று மதியம் துணி துவைப்பதற்காக, கிராமத்தில் உள்ள பத்ரா கால்வாய்க்கு சென்றிருந்தனர். அப்போது நால்வரில் ஒருவர், கால் தவறி நீரில் விழுந்தார்.
அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக, நீரில் இறங்கிய போது மூழ்கினர். நால்வரும் உயிரிழந்தனர்.
அங்கு வந்த பாளஹொன்னுார் போலீசார், கால்வாயில் மூழ்கிய நால்வரின் உடல்களை தேடி வருகின்றனர்.