தெரிந்தால் சொல்லுங்களேன்
பு ல்லு மார்க்கெட் கடைகளை, மாட்டு வண்டி நிலையத்தில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை, திடீரென இடிச்சாங்க. கடைகளை நடத்தி வந்தவங்க கண்ணீர் விட்டு அழுதும் மனம் இறங்காமல் இடித்து தள்ளி 'தன்னால் எல்லாம் முடியுமென' அதிகாரத்தை காட்டினாங்க. மூன்று மாதம் ஆகியும், எந்த ஆக் ஷனும் காணோம். 50 கோடி ரூபாய் கடன் வாங்குவதா சொன்னாங்க; வாங்கிட்டாங்களா. அதனை எந்த திட்டத்துக்கு பயன்படுத்தினாங்கன்னும் தெரியலையே. அடுக்குமாடி வணிக வளாகம் உருவாகுமா. ஜனங்க கேட்கிறாங்க... தெரிந்தவங்க சொல்வாங்களா.
யாருடைய உள்வேலை
மு னிசி.,யின் பெரிய ஆபீசரு திடீர் 'டிரான்ஸ்பர்'. எதுக்குன்னு சந்தேகங்களை எழுந்து உள்ளது. முறைகேடுகளுக்கு ஒத்து போகாததால் அவரை வாலண்டரியாக வெளியேற்ற சதி நடந்திருப்பதாக முனிசி., வட்டாரத்தில் 'பேச்சு' அடிபடுது. கமிஷன் கொள்ளையர்களின் 'தர்பார்' படி விரட்டியாச்சு. வந்துள்ள புதியவராவது தாங்குவாரா. இவரை கோல்மால் வட்டத்துக்குள் சிக்கி சிதைக்கும் முன் விடைபெறுவாரா.
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவர் ஆபீசராக நீடிப்பாரோ.
நடப்பு ஐந்து ஆண்டுகளில் முனிசி., ஆபீசர்கள் 11 பேரை இடமாற்றம் செய்திருக்காங்க. இப்படி எந்த காலத்திலும் நடந்ததே இல்லை. இடமாற்றம் யாருடைய உள்வேலை என்பதே கோல்டு சிட்டியின் அரசியல்வாதிகளின் வாதமாக இருக்குது.
புது அரசியல் ஆரம்பம்
கோ ல்டு சிட்டியில் இரு முறைக்கு மேல் தொடர்ந்து ஒருவர் அசெம்பிளிக்கு எலக்ட் ஆனதில்லை. இடையில் ரெஸ்ட் கொடுப்பது வழக்கம். அதை தெரிந்த, அறிந்த பவர் ஸ்டேஷனின் 'ஜெராக்ஸ்' ஆதிக்கத்தை முடிவு கட்ட எதிர்க்கட்சிங்க ஒண்ணு கூட போறாங்களாம்.
முனிசி., தேர்தலில் ஆதிக்க அதிகாரத்துக்கு எதிராக 35 வார்டுகளிலும் கூட்டணியின் முகவரியில் 'ஓரணியில் வேட்பாளர்களை' அறிவிக்க போறாங்களாம். முனிசி.,க்கு உள்ளூரின் மாஜி அசெம்பிளிக்காரரை தலைவராக்க போறாங்களாம்.
இப்பவே பத்த வெச்சிட்டாங்க. புது அரசியல் ஆரம்பம் ஆகியுள்ளது.
யாருக்கு தான் அதிகாரம்?
கோ ல்டு சிட்டி -- சிலிகான் சிட்டி சென்று வரும் ரயில்களின் நேரம் மாற்றியதால் தினப் பயணியர் தினமும் அவதிப்படுவதாக வாட்ஸாப்களில் தகவல் பரவுதே. இதை கவனிப்பார் இல்லையா என எக்கச்சக்க கேள்வி எழுந்து உள்ளதே. பொறுப்பான மந்திரி வந்தாரு; மனு வாங்கினாரு. அதில் அவரு என்னமோ கிறுக்கினாரு. ஆனால் அந்த மனுவுக்கு எந்த பிரயோஜனமும் ஆகல. அவருக்கு பின், அசெம்பிளி மேடமும் ஆபிசரை சந்திச்சாங்க; மனு கொடுத்தாங்க. ஆவன செய்வதாக சொல்லி அனுப்பினாரு. இதுவும் பயன்பாட்டுக்கு வரல. யாருக்கு தான் அதிகாரம் இருக்குதோ.
செங்கோட்டை புல்லுக்கட்டுக்காரருக்கும் பயணியர் சங்கம் மனு கொடுத்தாங்க. அந்த மனு காகிதம், எந்த குப்பைத் தொட்டிக்கு போச்சுதோன்னு பயணியர் தரப்பில் பேசுறாங்க.
தினப் பயணியரை இம்சை படுத்தும் நேரம் மாற்றம் அவஸ்தையை யார் தடுக்க போறாங்களோ. வேலை வாய்ப்புக்கு இருக்கிற ஒரே வசதி ரயிலு தான் அதையும் பயன்படாமல் செய்வதில் அப்படி என்ன திருப்தியோ.

