/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அனுமதியின்றி பேனர் வைத்தால்... தலைமை கமிஷனர் எச்சரிக்கை
/
அனுமதியின்றி பேனர் வைத்தால்... தலைமை கமிஷனர் எச்சரிக்கை
அனுமதியின்றி பேனர் வைத்தால்... தலைமை கமிஷனர் எச்சரிக்கை
அனுமதியின்றி பேனர் வைத்தால்... தலைமை கமிஷனர் எச்சரிக்கை
ADDED : ஜன 19, 2026 06:08 AM

பெங்களூரு: ''பெங்களூரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதத்துடன், சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்,'' என ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறி உள்ளார்.
இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:
பெங்களூரு தெருக்களில் சட்டவிரோத பேனர், பிளக்ஸ் போர்டு, பதாதைகள் வைப்பது அதிகரித்து வருகின்றன. அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இருப்பினும், அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இது, துணை முதல்வர் சிவகுமாரின் வழிகாட்டுதலின் பேரில் நடக்க உள்ளது. இதனால், பேனர் கலாசாரம் நிச்சயம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

