தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தங்க கட்டி கடத்திய நான்கு பேர் கைது

தங்க கட்டி கடத்திய நான்கு பேர் கைது

தங்க கட்டி கடத்திய நான்கு பேர் கைது


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த சிலர் தங்க கட்டிகள் கடத்தியதாக, சுங்க துறைக்கு தகவல் கிடைத்தது. விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில், மூன்று பெண்கள், ஒரு ஆண் என 4 பேரை சுங்கத் துறையினர் மடக்கினர்.

அவர்களை சோதனைக்கு உட்படுத்திய போது, தங்க கட்டிகளை உள்ளங்கால்களில் ஒட்டி, அதன் மேல் காலணிகளை அணிந்து நுாதன முறையில் கடத்தி வந்தது தெரிந்தது.

இவர்களிடம் இருந்து, 2.60 கோடி ரூபாய் மதிப்பிலான, 28 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேரும் கைதாகினர்.

விசாரணையில் அவர்கள் சென்னையின் வியாசர்பாடியை சேர்ந்த ரம்ஜான் பேகம், நஸ்ரின் பானு, ஹைருன் பாத்திமா, ஆஷாரூதீன் செல்லதுரை என்பது தெரிந்தது. இவர்கள் மீது, சுங்க சட்டத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us