தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தசரா யானைகளுடன் படம் எம்.எல்.ஏ., மகள்களால் சர்ச்சை

தசரா யானைகளுடன் படம் எம்.எல்.ஏ., மகள்களால் சர்ச்சை

தசரா யானைகளுடன் படம் எம்.எல்.ஏ., மகள்களால் சர்ச்சை


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு தசரா யானைகளுடன், புகைப் படம் எடுத்ததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியின் மகள்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்துள்ள யானைகள், அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ பொதுமக்கள், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல யானைகள் நடைபயிற்சி செல்லும் சாலையிலும், மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகள்கள் வைஷாலி, தீபாலி ஆகியோர், தசரா யானைகளுடன் புகைப்படம் எடுத்ததுடன், நடைபயிற்சி செல்லும் சாலையிலும் சென்று, யானைகளுடன் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

‘அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலான நிலையில், ‘தசரா யானை விஷயத்தில் பொதுமக்களுக்கு ஒரு நியாயம், எம்.எல்.ஏ.,வின் மகள்களுக்கு ஒரு நியாயமா’ என, இணையவாசிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us