/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்
/
நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்
ADDED : ஏப் 07, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்வார்; உத்தர கன்னடாவில் சிறுவன் உட்பட 4 பேர், குரங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
குரங்கு காய்ச்சல் ஷிவமொக்கா, உத்தர கன்னடா மாவட்டங்களில் அடிக்கடி பரவி வருகிறது. இந்நிலையில் உத்தர கன்னடாவின் ஷிர்சி ஹெக்கடகட்டே, ரேவணகட்டே கிராமத்தின் ஒரு சிறுவன் உட்பட 2 பேருக்கும், சித்தாபுராவின் கானசூரி, ஹொன்னவரதா கிராமத்தில் 2 பேருக்கும் நேற்று குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
இதனால் கிராம மக்களும், சுகாதார துறை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெயில் தாக்கத்தால் குரங்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என, கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

