தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொழிலதிபர் 'பிளாக் மெயில்' மகன் உட்பட நால்வர் கைது

தொழிலதிபர் 'பிளாக் மெயில்' மகன் உட்பட நால்வர் கைது

தொழிலதிபர் 'பிளாக் மெயில்' மகன் உட்பட நால்வர் கைது


ADDED : செப் 04, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா:சொத்துக்காக தன் தந்தையை பற்றி ஆபாசமாக சித்தரித்து, பிளாக்மெயில் செய்த மகன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவை சேர்ந்தவர் சதீஷ், 50; ரியல் எஸ்டேட் தொழிலதிபர். மத்துார் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்துகிறார்.

சதீஷின் மகன் பிரணவ், 25. இவர் தீய பழக்கங்கள் கொண்டவர். தொழில் நடத்துவதாக கூறி, தந்தையிடம் பெற்ற கோடிக்கணக்கான ரூபாயை, வீணாக செலவு செய்துவிட்டு, பணம் கேட்டு மீண்டும் தொந்தரவு கொடுத்தார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால், தந்தையை பழி வாங்க முடிவு செய்தார்.

சதீஷின் உருவப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, 'வாய்ஸ் எடிட்' செய்து 'வாட்ஸாப் குரூப்'பில் போட்டு, 'பிளாக்மெயில்' செய்ய துவங்கினார்.

இதன் மூலம் தந்தையின் மன நிலையை குழப்பி, சொத்துக்களை அபகரிப்பது பிரணவின் திட்டமாக இருந்தது. இதற்கு அவரது கூட்டாளிகள் துாண்டுதலாக இருந்தனர்.

மகனின் செயலால் கோபமடைந்த தந்தை சதீஷ், மத்துார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரணவ், அவரது கூட்டாளிகள் மகேஷ், ஈஸ்வர், பிரீத்தம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us