UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 04:32 PM
– நமது நிருபர் –
விஜயதசமி அன்று காலையில் நடக்கும், வைரமுடி சண்டைக்காக நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மைசூரு தசரா கிளைமாக்சை எட்டியுள்ளது. பண்டிகையின் சிகர நிகழ்ச்சியாக நாளை ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது. ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவங்குவதற்கு, மன்னர் குடும்பத்தினர் வருவதும் வழக்கமாக உள்ளது.
இதற்கு முன்பு மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள மல்யுத்த மைதானத்தில், வைரமுடி சண்டை நடக் கும். யானை தந்தம் அல்லது காண்டாமிருகம் கொம்பால் செய்யப்பட்ட கூர்மை ஆயுதத்தை கையில் அணிந்து கொண்டு, இரு ஜோடியாக நான்கு வீரர்கள் களத்தில் மல்லுகட்டுவர்.
தலைப்பகுதியை தவிர உடலில் வேறு எங்கும் தாக்க கூடாது என்பதே போட்டியின் விதி. ஏதாவது ஒரு வீரரின் தலையில் இருந்து ரத்தம் வந்ததுடன் போட்டி நிறுத்தப்படும்.
யார் ரத்தம் வர வைத்தாரோ அந்த வீரர் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார். இந்த போட்டி முடிந்ததும், மன்னர் குடும்பத்தினர் ஜம்பு சவாரிக்கு புறப்பட்டு செல்வது பாரம்பரியமாகஉள்ளது.
இந்த ஆண்டு வைரமுடி போட்டிக்காக, மைசூரை சேர்ந்த மஞ்சுநாத் ஜட்டி, பிரத்யும்னா ஜட்டி, மகேஷ் நாராயண் ஜட்டி, ராகவேந்திர ஜட்டி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
