sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

திருமண வலைதளங்களில் மோசடி கர்நாடகாவில் அதிகரிப்பு

/

திருமண வலைதளங்களில் மோசடி கர்நாடகாவில் அதிகரிப்பு

திருமண வலைதளங்களில் மோசடி கர்நாடகாவில் அதிகரிப்பு

திருமண வலைதளங்களில் மோசடி கர்நாடகாவில் அதிகரிப்பு


ADDED : செப் 07, 2025 10:45 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : திருமண வலைதளங்களில், போலியான ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்து, மோசடி செய்வது அதிகரித்துள்ளது. பெங்களூரில் மட்டுமே 60 சதவீதம் வழக்குகள் பதிவாகின்றன.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

திருமண சேவைகளுக்காக ஏராளமான வலைதளங்கள் செயல்படுகின்றன. இவைகளை தவறாக பயன்படுத்தி, மோசடி செய்யும் சம்பவங்கள் கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. பெங்களூரில் மட்டுமே 60 சதவீதம் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 முதல் 2025 மே வரை 381 வழக்குகள் பதிவாகின.

பல ஆண்கள், திருமண வலைதளங்களில் போலியான ஆவணங்களை கொடுத்து, பதிவு செய்து கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, இளம் பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு, மோசடி செய்கின்றனர். இது குறித்து, பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

மவுனம் இது போன்ற, திருமண வலைதளங்கள் மோசடி குறித்த பல சம்பவங்கள், வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. பணம் கொடுத்து ஏமாந்த பலர், போலீசாரிடம் புகார் அளிக்காமல் மவுனமாக இருக்கின்றனர். சிலர் போலீஸ் நிலையங்களில், சமாதான பேச்சு நடத்தி, பிரச்னையை சரி செய்கின்றனர்.

வழக்கு பதிவானால் போலீஸ் நிலையம், நீதிமன்றத்துக்கு அலைய வேண்டி வரும் என்பதாலும், தங்களுக்கு ஆதரவாக உறவினர்கள், குடும்பத்தினர் இல்லை என்பதாலும், இளம் பெண்கள் பலரும் புகார் அளிக்க தயங்குகின்றனர்.

பல்வேறு திருமண வலைதளங்களில், பெண்கள் தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்கின்றனர். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள் பதிவு செய்யும் விபரங்களை தெரிந்து கொள்ளும் நபர்கள், பொய்யான தகவல்களை தெரிவித்து, அவர்களை ஏமாற்றி விடுகின்றனர்.

வெளிநாட்டினர் டில்லி, ராஜஸ்தான், பீஹார், மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களின் இளைஞர்கள், திருமண வலைதளங்களில் போலியான ஆவணங்கள் கொடுத்து, பதிவு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சில வெளிநாட்டினரும் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

இரண்டாம் திருமணத்துக்காக, வலைதளத்தில் பாகல்கோட்டின் ஒரு பெண், தன் பெயரை பதிவு செய்து கொண்டிருந்தார். இவரை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, 5.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த நைஜீரிய நபர், சமீபத்தில் கைதானார். இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

திருமண வலைதளங்களில், தங்களின் பெயரை பதிவு செய்யும் பெண்கள், வரன்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வலைதளங்களில் உள்ள விபரங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்ய வேண்டும். சந்தேகமானவராக இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us