sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

/

15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

20


ADDED : பிப் 05, 2026 02:08 PM

Google News

20

ADDED : பிப் 05, 2026 02:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து பிப்ரவரி 13ம் தேதி அறிவிப்பு வெளியாகுகிறது'' என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றன. கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: தொழில் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

மொத்தமாக 34 ஆயிரத்து 237 கோடி மதிப்பில் முதலீடு, 55 ஆயிரத்து 96 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் பணியை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து பிப்ரவரி 13ம் தேதி அறிவிப்பு வெளியாகுகிறது. பிப்ரவரி 12ம் தேதி கருத்தரங்கில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறினார்.






      Dinamalar
      Follow us