தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கிராம கணக்கு அதிகாரி தேர்வில் மோசடி கர்நாடகாவில் முதலிடம் பிடித்தவர் கைது

கிராம கணக்கு அதிகாரி தேர்வில் மோசடி கர்நாடகாவில் முதலிடம் பிடித்தவர் கைது

கிராம கணக்கு அதிகாரி தேர்வில் மோசடி கர்நாடகாவில் முதலிடம் பிடித்தவர் கைது


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 07:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக தேர்வாணையம் நடத்திய கிராம கணக்கு அதிகாரிகள் தேர்வில், மோசடி செய்து முதலிடம் பிடித்தவர் கைது செய்யப்பட்டார்.

ஹாவேரியைச் சேர்ந்தவர் சங்கர் பன்னுாரு. இவர் கர்நாடக தேர்வாணையம், சில நாட்களுக்கு முன் நடத்திய கிராம கணக்கு அதிகாரிகள் பணியிடத்துக்கான தேர்வு எழுதினார். இதில் 151 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

ஆனால் இந்த தேர்வுக்கு முன், அக்டோபர் 4ல் நடந்த ஏட்டுகளுக்கான தேர்வில், வெறும் 25 மதிப்பெண் மட்டும் பெற்றிருந்தார். இவர், கிராம கணக்கு அதிகாரி தேர்வில், 151 மதிப்பெண் பெற்றது எப்படி என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து, சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதை கவனித்த தேர்வாணையம், விசாரணை நடத்தும்படி ஹாவேரி கலெக்டருக்கு கடிதம் எழுதியது. இதன்படி கலெக்டர் நடத்திய விசாரணையில், சங்கர் பன்னுாரின் திருட்டுத்தனம் வெளிச்சத்துக்கு வந்தது.

அதாவது, ஷிகாவி தேர்வு மைய அறைக்குள் மொபைல் போனை கொண்டு சென்று, ‘கூகுள் லென்ஸ் ஆப்’ பயன்படுத்தி வினாத்தாளை, ‘ஸ்கேன்’ செய்து பதில் எழுதியுள்ளார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us