/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணம் செய்வதாக கூறி மோசடி: இன்ஸ்பெக்டர் மீது பலாத்கார புகார்
/
திருமணம் செய்வதாக கூறி மோசடி: இன்ஸ்பெக்டர் மீது பலாத்கார புகார்
திருமணம் செய்வதாக கூறி மோசடி: இன்ஸ்பெக்டர் மீது பலாத்கார புகார்
திருமணம் செய்வதாக கூறி மோசடி: இன்ஸ்பெக்டர் மீது பலாத்கார புகார்
ADDED : அக் 23, 2025 11:11 PM

டி.ஜே.ஹள்ளி: திருமணம் செய்வதாக உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதாக, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீது, டி.ஜி.பி., அலுவலகத்தில் 36 வயது பெண் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுனில், 38, மீது, டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் 36 வயது பெண் பலாத்கார புகார் செய்தார். பின், அந்த பெண் கூறியதாவது:
எனக்கும், ஒருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி புகார் அளிக்க சில மாதங்களுக்கு முன்பு, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் சென்றேன். எனக்கு உதவி செய்வதாக இன்ஸ்பெக்டர் சுனில் கூறினார். என் மொபைல் போனுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பினார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறினார். அவரது மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில், தாசரஹள்ளி 8வது மைல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். மது அருந்திய பின், இருவரும் உடலுறவு கொண்டோம்.
'உனக்கு அழகு நிலையம் வைத்து தருகிறேன்; அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருகிறேன்; திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை காட்டி, பல முறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக, அவர் என்னை சந்திக்கவில்லை; என் மொபைல் போன் அழைப்பையும் ஏற்கவில்லை. அவரை நேரில் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன்; மறுப்பு தெரிவித்தார். என் மீது யாரிடமாவது புகார் கொடுத்தால் உன்னை சும்மா விட மாட்டேன்; உன் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன் என்று என்னை மிரட்டினார். இதுபற்றி டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் செய்து உள்ளேன். எனக்கு நியாயம் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

