/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இலவச ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனம் வழங்கல்
/
இலவச ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனம் வழங்கல்
ADDED : ஜூன் 07, 2025 11:03 PM

தங்கவயல்: தங்கவயலில் அவசர தேவைக்கு இலவச ஆம்புலன்சை ஜே.ஆர்.எஸ்., தொண்டு நிறுவனம் நேற்று வழங்கியது.
தங்கவயல் கோரமண்டல் பகுதியில் ஜே.ஆர்.எஸ்., தொண்டு நிறுவன ஆண்டு விழா நேற்று நடந்தது.
தலைவர் ஸ்டீபன் டேவிட் தலைமையில் நடந்த விழாவில், அவசர உதவிக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. தங்கவயல் நகராட்சி தலைவர் இந்திரா காந்தி அறிமுகப்படுத்தினார். ஆம்புலன்ஸ் தேவைப்படுவோர் 96633 19191 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்துடன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள், பெண்களுக்கு சேலைகள், மாணவ - மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வறுமையில் உள்ள 100 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுதம், கோலார் மாவட்ட தலித் ரக் ஷன வேதிகே தலைவர் எஸ்.அன்பரசன், வாணி நிலையம் நுாலக செயலர் ஆர்.பிரபுராம் உட்பட பலர் பங்கேற்றனர்.