/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேல்மருவத்துாருக்கு இலவச பஸ் பயணம்
/
மேல்மருவத்துாருக்கு இலவச பஸ் பயணம்
ADDED : ஜன 02, 2026 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயலில் இருந்து மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக, ஆர்.கே., பவுண்டேஷன் சார்பில், நேற்று முன்தினம் இலவச பஸ்கள் இயக்கப்பட்டன.
தங்கவயலில் இருந்து ஆண்டு தோறும் மேல்மருவத்துாருக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இந்தாண்டும் ஆர்.கே.பவுண்டேஷன் சார்பில், இலவச பஸ்கள் இயக்கப்பட்டன.
சித்தரெட்டி, பொம்மனஹள்ளி, தாத்தேனஹள்ளி, தொட்டகாரி மற்றும் சொன்னேகுப்பா கிராமங்களை சேர்ந்த, 500 பேர், இந்த இலவச பஸ்களில் பயணம் செய்தனர். அவர்களை ஆர்.கே.பவுண்டேஷன் தொண்டு நிறுவன தலைவர் மோகன் கிருஷ்ணா வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். கிராம பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

