/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை நிர்வாணமாக்கி கொடுமை கணவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு
/
மனைவியை நிர்வாணமாக்கி கொடுமை கணவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு
மனைவியை நிர்வாணமாக்கி கொடுமை கணவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு
மனைவியை நிர்வாணமாக்கி கொடுமை கணவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு
ADDED : ஜன 02, 2026 06:05 AM
சிக்கமகளூரு: வ ரதட்சணை ஆசையால், மனைவியை நிர்வாணமாக்கி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவின் நந்தி ஹொசள்ளி கிராமத்தில் வசிப்பவர் திம்மப்பா, 34.
இவர், அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, 2014ல் திருமணம் செய்தார். இரு பெண் குழந்தைகள் உள்ளன.
இரண்டு குழந்தைகள் பிறந்த பின், கணவர் குடும்பத்தினரின் குணம் மாறியது. தாய் வீ ட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை திம்மப்பா கொடுமைப்படுத்தினார்.
மனைவியை ஒதுக்கிவிட்டு வேறு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும்படி, திம்மப்பாவை, அவரது தந்தையும், அண்ணனும் துாண்டி விட்டனர்.
அவரும் மனைவியிடம், 'உனக்கு இரண்டும் பெண்ணாக பிறந்துள்ளது. நான் வேறு திருமணம் செய்து கொள்கிறேன்.
'நீ வீட்டை விட்டு செல்' என்று கூறி திட்டியதுடன் அடித்துள்ளார். கணவரின் தாக்குதலால், மனைவியின் உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டு, கருமையாக மாறியது. அதுமட்டுமின்றி மனைவியை நிர்வாணமாக்கி, அறையில் அடைத்து வைத்திருந்தார்.
நேற்று முன் தினம் இரவு, பின் வாசல் வழியாக வெளியே ஓடி வந்த மனைவி, வழியில் கிடைத்த துணியால் உடலை மறைத்து, தாய் வீட்டுக்கு வந்து நடந்ததை கூறினார்.
அதன் பின், லிங்கத ஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். பெண்ணின் கணவர், மாமனார் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

