/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
/
போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 04, 2026 04:46 AM
தேவனஹள்ளி: உயர்கல்வி முடித்த வேலையில்லா இளம் திறமையாளர்களுக்கு ஹொஸ்கோட்டில் போட்டி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி அளிக்கப் படுகிறது.
பெங்களூரில் உள்ள ஞானகங்கோத்ரி போட்டி தேர்வு பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:
பெங்களூரு ஞானகங்கோத்ரி போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனம், கர்நாடகாவில் பணிபுரியும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் 'ஞானசேது' என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்துகிறது.
யு.பி.எஸ்.சி., - கே.பி.எஸ்.சி., பவுன்டேஷன் கோர்ஸ், ஐ.ஏ.எஸ்., - கே.ஏ.எஸ்., - பி.எஸ்., - பி.டி.ஓ., குரூப் '-சி' முதல் நிலை உதவியாளர், இரண்டாம் நிலை உதவியாளர், கிராம கணக்காளர், ஆசிரியர்களுக்கான டி.இ.டி., மற்றும் சி.இ.டி., வங்கி தேர்வுகள் ஆர்.ஆர்.பி., - எஸ்.எஸ்.சி., ஆகியவற்றில் 250 பேருக்கு பயிற்சி அளிக்கிறது.
ஹொஸ்கோட் நகரில் உள்ள வெங்கடாத்திரி அரங்கில் ஆன்லைன், ஆப்லைன் என இரு முறைகளிலும், வரும் 11 முதல் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் கன்னடம், ஆங்கில மொழிகளில் கற்பிக்கப்படும். திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் பயிற்சி அளிப்பர்.
ஹொஸ்கோட் சட்டசபை தொகுதியை சேர்ந்த ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் 10க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான தகுதி பி.யு.சி., மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. இதற்கான விண்ணப்பங்களை ஹொஸ்கோட் நகரில் உள்ள வெங்கடாதிரி அரங்கில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஒரு புகைப்படம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

