ஆர்.சி.பி., டிக்கெட் இருந்தால் மெட்ரோவில் இலவச பயணம்
ஆர்.சி.பி., டிக்கெட் இருந்தால் மெட்ரோவில் இலவச பயணம்
ADDED : மார் 22, 2026 05:05 AM
பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் நடக்கும், ஆர்.சி.பி., அணி போட்டிகளை காண டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு, மெட்ரோ ரயிலில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐ.பி.எல்., என்ற, பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வரும், 28ம் தேதி துவங்குகின்றன. முதல் போட்டிநடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் - சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.
கடந்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்.சி.பி., அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின், சின்னசாமியில் மீண்டும் ஐ.பி.எல்., போட்டிகள் நடப்பது, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது.
இந்நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடக்கும் ஆர்.சி.பி., அணிக்கான போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் வைத்திருப்போர், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது, ஆர்.சி.பி., ரசிகர்கள் மத்தியில் ம கிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெட்ரோ ரயிலில் இலவச பயணம் என்பது கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, டிக்கெட் விற்பனை துவங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 80 சதவீத டிக்கெட் ஆன்லைனிலும், 20 சதவீதம் மட்டும் நேரடியாக மைதானத்திலும் விற்கப்படும். 35,000 பார்வையாளர்களை கொண்ட மைதானத்தின் இருக்கை வசதி, 28,000 பார்வையாளர்களாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் கூட்டநெரிசலை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
