தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பி.யு., 2ம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்

 பி.யு., 2ம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்

 பி.யு., 2ம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்


ADDED : பிப் 15, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பொதுத்தேர்வின் போது. பி.யு., இரண்டாம் ஆண்டு மாணவர்கள், அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடகாவில் பி.யு., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரும், 28ம் தேதியில் இருந்து மார்ச், 18 வரை பொதுத்தேர்வு நடக்கிறது.

இம்மாணவர்கள், தேர்வு நாட்களில் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொருந்தும்; கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசு பஸ்சில் மாணவர்கள் பயணிக்கும் போது, தங்கள், 'ஹால் டிக்கெட்டு'களை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். ஹால் டிக்கெட் காண்பித்தால் மட்டுமே இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.

அனைத்து பஸ்களும் சரியான நேரத்தில் இயக்கப்பட வேண்டும். பஸ் செல்லும் வழியில் தேர்வு மையங்கள் இருந்தால், அந்த இடத்திலே பஸ்சை நிறுத்தி மாணவர்கள் இறங்க உதவ வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us