தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'பிரீடம் ஹப்பா'வுக்கு ரூ.6 கோடி செலவாம்!

 'பிரீடம் ஹப்பா'வுக்கு ரூ.6 கோடி செலவாம்!

 'பிரீடம் ஹப்பா'வுக்கு ரூ.6 கோடி செலவாம்!


ADDED : ஆக 18, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: 'பிரீடம் ஹப்பா' எனும் சுதந்திர தின திருவிழாவை நடத்த , ஒரு நாள் கூத்துக்காக மக்கள் வரிப்பணம், 6 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என, ம.ஜ.த., குற்றஞ்சாட்டி உள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டங்கள், கடந்த 15ம் தேதி, விதான் சவுதா வளாகத்தில், 'பிரீடம் ஹப்பா' எனும் பெயரில் பிரம்மாண்டமாக நடந்தன. இதில் கலை நிகழ்சிகள், உணவு ஸ்டால்கள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றன. இந்த விழாவுக்கு, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து, ம.ஜ.த., வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு நாள் கூத்துக்கு, 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டது கண்டனத்திற்குரியது. கன்னட மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது. முதல்வர் வீட்டு காசிலோ, அமைச்சர் வீட்டு காசிலோ விழா நடக்கவில்லை. மக்கள் வரிப்பணத்திலே விழா நடந்து உள்ளது.

அப்படி இருக்கையில், டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும். அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, முதல்வர் சிவகுமார் மக்களிடம் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us