/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ஹிந்து முறைப்படி பிரான்ஸ் ஜோடிக்கு திருமணம்

ADDED : நவ 13, 2025 04:14 AM

உடுப்பி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்ஜோடி, ஹிந்து சம்பிரதாயங்களால் ஈர்க்கப்பட்டு, கொல்லுார் மூகாம்பிகை கோவிலில், ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து அபய ஆயுர்வேத கிளினிக் டாக்டர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்தவர்கள் நரோட்டம் தாஸ், ஜானவா. ஆயுர்வேதத்தின் மீது கொண்ட நம்பிக்கையால், கடந்த நான்கு ஆண்டுகளாக 'பஞ்சகர்மா' சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர, ஒடிசி நடனமும் கற்கின்றனர்.
கொல்லுார் பிருந்தாவனத்தில் பல ஆண்டுகளாக சாஸ்திரம் படித்து வருகின்றனர். இந்திய ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், கிருஷ்ணரின் பக்தர்களாக மாறி உள்ளனர். இங்கு இருந்தபோது இருவரும் காதலித்தனர். நாட்டின் பல ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
இந்திய பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட இருவரும், ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இது தொடர்பாக என்னிடம் தெரிவித்தனர்.
நாங்களும், இதற்கான ஏற்பாடுகள் செய்தோம். இருவருக்கும் வேத பண்டிதர் ஷியாம்சுந்தர் அடிகா தலைமையில் கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து, வரவேற்பும், இசை நிகழ்ச்சியும் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.