/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாரத்தான் போட்டி செய்தி: வெளிநாட்டு வீரர்களுக்கு ரூ.22 லட்சம் முதல் இந்திய வீரருக்கு ரூ.3 லட்சம்

ADDED : ஏப் 28, 2025 05:07 AM
வெளிநாட்டு வீரர்களான ஜோசுவா செப்டேகி, சேமன் டெஸ்பேஜியோர்ஜிஸ் இருவருக்கும் தலா 22 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்தியாவில் ஆடவர் பிரிவில் -1. அபிஷேக் பால், 2. சவான் பர்வால், 3. கிரண் பல்லு; மகளிர் பிரிவில் -1. சஞ்சீவினி, 2. பாரதி நைன், 3. பூனம் சோனுனே ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். முதலிடம் பிடித்தவருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மாரத்தானில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டன.
10 கி.மீ., துாரத்தை ஓடி முடித்தவர்களுக்கு மெடல் வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் மெட்ரோ ரயில் நிலையம், பஸ் முனையங்கள் என பொது இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மாரத்தான் ஓட்டத்தை சாலையில் சென்றவர்கள் பார்த்து ரசித்தனர்.
ஓட்டம் நடந்த சாலைகளின் மேடு, பள்ளம், குப்பைகள் கிடந்ததால் போட்டியில் பங்கேற்ற பலரும் அசவுகரியமாக உணர்ந்தனர் என பா.ஜ., -- எம்.பி., தேஜஸ்வி சூர்யா துணை முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதி உள்ளார்.