/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பொய் வழக்கு பதிவால் விரக்தி இளைஞர் துாக்கிட்டு தற்கொலை
/
பொய் வழக்கு பதிவால் விரக்தி இளைஞர் துாக்கிட்டு தற்கொலை
பொய் வழக்கு பதிவால் விரக்தி இளைஞர் துாக்கிட்டு தற்கொலை
பொய் வழக்கு பதிவால் விரக்தி இளைஞர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 13, 2025 11:01 PM

சிக்கமகளூரு: போலீஸ் ஏட்டால் தாக்கப்பட்ட தலித் இளைஞர் ஒருவர், துாக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.
சிக்கமகளூரு மாவட்டம், களசா தாலுகாவின், பஸ்திகத்தே கிராமத்தில் வசித்தவர் நாகேஷ், 29. தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர், களசா அருகில் உள்ள எஸ்டேட் ஒன்றில், ஜீப் ஓட்டுநராக பணியாற்றினார்.
ஜூலை 17ம் தேதி இரவு, குதுரேமுக் போலீஸ் நிலைய ஏட்டு சித்தேஷ், நடு ரோட்டில் மதுபானம் அருந்தி பார்ட்டி நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது இதே சாலையில் ஜீப்பில் வந்த நாகேஷ், வழி விடும்படி கூறினார். இதனால் கோபமடைந்த ஏட்டு சித்தேஷ், நாகேஷை தாக்கினார். அது மட்டுமின்றி பணியில் குறுக்கிட்டு, தன்னை தாக்க முயற்சித்ததாக பொய்யான வழக்கு பதிவு செய்தார்.
சித்தேஷின் அராஜகம் குறித்து, குதுரேமுக் போலீஸ் நிலையத்தில் நாகேஷ் புகார் அளித்தார். இதை பற்றி விசாரணை நடத்த, போலீஸ் எஸ்.பி., விக்ரம் ஆம்டே, கொப்பா டி.எஸ்.பி., தலைமையில் குழு அமைத்தார். குழுவும் நடந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஏட்டு தன்னை தாக்கியது, பொய்யான வழக்கு பதிவு செய்ததால் மனம் நொந்திருந்த நாகேஷ், நேற்று மதியம் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.