தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தி ம.ஜ.த.,வுக்கு தாவும் காங்., - எம்.எல்.ஏ.,?

 அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தி ம.ஜ.த.,வுக்கு தாவும் காங்., - எம்.எல்.ஏ.,?

 அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தி ம.ஜ.த.,வுக்கு தாவும் காங்., - எம்.எல்.ஏ.,?


ADDED : ஆக 18, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ், ம.ஜ.த.,வில் இணைய உள்ளதாக சூசகமாக பேசியது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில், மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால், அவர் கடும் விரக்தியில் உள்ளார்.

ரமேஷ், ஏற்கனவே ம.ஜ.த., சார்பில் ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். உட்கட்சி பிரச்னையால் ம.ஜ.த.,விலிருந்து விலகி, 2018ல் காங்கிரசில் இணைந்தார்.

இந்நிலையில், இவரது தாய் விஜயலட்சுமியின் பிறந்த நாள் விழா, மாண்டியா அரகெரேவில் நேற்று நடந்தது. இதில், ரமேஷ் பேசியதாவது:

வாழ்க்கையில் எனக்கு அனைத்தும் கிடைத்துள்ளது. ஆனால், நீண்ட நாட்களாக, நான் விரும்பிய ஒரு விஷயம் மட்டும் கிடைக்கவில்லை; இதற்கான காரணம் புரியவில்லை. எனது தந்தை ம.ஜ.த.,வில் இருந்தவர். தற்போது, நான் காங்கிரசில் உள்ளேன். இதற்கு முன்னதாக ம.ஜ.த.,வில் இருந்தேன்.

அமைச்சர் பதவி பெற நேர்மையான வழியில் முயன்றேன்; ஆனால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மனிதனுக்கு ஆசைகள் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அரசியலில் நான் எங்கே வேண்டுமானாலும் இருப்பேன்; அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன் மூலம், ரமேஷ் மீண்டும் ம.ஜ. த.,வில் இணைய உள்ளதாக சூசகமாக தெரிவித்திருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us