தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் வரி ஏய்ப்புக்காக ரூ.3 கோடி அபராதம் வசூல்

 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் வரி ஏய்ப்புக்காக ரூ.3 கோடி அபராதம் வசூல்

 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் வரி ஏய்ப்புக்காக ரூ.3 கோடி அபராதம் வசூல்


ADDED : ஆக 18, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 02:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: வரி ஏய்ப்பு செய்து விதிமீறலாக இயங்கிய, வெளிமாநில பதிவு எண் கொண்ட 200க்கும் மேற்பட்ட வாகனங்களை, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார்களை, சிலர் கர்நாடகாவில் இயக்குகின்றனர். இதன் விளைவாக கர்நாடக போக்குவரத்து துறைக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுத்துள்ளனர். அவ்வப்போது சோதனையிட்டு வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.

தனித்தனி குழுக்கள் போக்குவரத்து துறை கமிஷனரின் உத்தரவுப்படி, பெங்களூரின் பல்வேறு இடங்களில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். 10 தனித்தனி குழுவினர் ஆங்காங்கே சோதனை நடத்தினர். விதிமீறலாக இயங்கிய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, தமிழகம், நாகாலாந்து, உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, கோவா, குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மாநிலங்களின் பதிவு எண் கொண்ட ஆடி, பென்ஸ், டாடா ஹாரியர், மஹிந்திரா ஸ்கார்பியோ உட்பட, 200க்கும் மேற்பட்ட வாகனங்களை, பறிமுதல் செய்தனர். கஸ்துாரி நகர் ஆர்.டி.ஓ., எல்லையில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆர்.டி.ஓ., அதிகாரிகளை பார்த்து, ஒடிஷா பதிவு எண் கொண்ட பைக் டாக்சி ஓட்டுநர் தப்பியோட முயற்சித்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த இருவர், கீழே விழுந்து காயம் அடைந்தனர். அதன்பின் பைக் டாக்சியை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.

இழப்பு ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடகாவில் சாலை வரி செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் வாகன உரிமையாளர்கள், வெளி மாநிலங்களில் சொகுசு கார்களை வாங்கி, அங்கேயே பதிவு செய்து பெங்களூரு கொண்டு வந்து ஓட்டுகின்றனர். இதனால் கர்நாடக அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது.

விதிமுறைகளின்படி, வெளி மாநிலங்களின் வாகனங்களை, நீண்ட காலம் வரை சாலை வரி செலுத்தாமல், வேறு மாநிலத்தில் பயன்படுத்துவது, சட்டப்படி குற்றமாகும்.

இத்தகைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்று (நேற்று) பல இடங்களில் சோதனை நடத்தி, வெளி மாநிலங்களின் பதிவு எண் கொண்ட, 200க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை பறிமுதல் செய்தோம். அந்த கார்களின் உரிமையாளர்களிடம் மொத்தமாக, 3 கோடி ரூபாய் அபராதம் வசூலித்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us