ADDED : ஏப் 14, 2026 06:08 AM

தார்வாட்: இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் கொலை வழக்கில், தலைமறைவு நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தார்வாட் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலராக இருந்தவர் பைரோஜ் படான், 28. கடந்த 10ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சக நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதமே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக படானின் நண்பர் முகமது ஷா உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று கூறியதாவது:
பைரோஜ் படான் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தலைமறைவாக இருந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளார். கைதான 9 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற காவலில் உள்ளனர். அடுத்த கட்ட விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுப்போம். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்பட வேணடும்.
நேரில் பார்த்த சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடக்கிறது. இக்கொலைக்கு, அரசியல் காரணங்கள் கிடையாது. நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட விரோதமே காரணம். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மீது பல வழக்குகள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
