ADDED : செப் 26, 2026 11:16 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும் என முதல்வர் சிவகுமாருக்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஆலந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., - பி.ஆர்.பாட்டீல் சமீபத்தில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்விஷயத்தை வலியுறுத்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் முதல்வர் சிவகுமாருக்கு எழுதிய கடிதம் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடிதத்தில், 'தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஐந்து வாக்குறுதி திட்டங்களை மட்டும் செயல்படுத்தினால் போதாது. பிற முக்கிய திட்டங்களையும் அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.
