தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தந்தையின் ஆசையை நிறைவேற்றிய தனயன் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்

 தந்தையின் ஆசையை நிறைவேற்றிய தனயன் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்

 தந்தையின் ஆசையை நிறைவேற்றிய தனயன் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்


UPDATED : மார் 15, 2026 05:51 AM

ADDED : மார் 15, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2026 05:51 AM ADDED : மார் 15, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில், 53 வது ரேங்க் பெற்று, பெலகாவியின் சிக்கோடி தாலுகா ஹதராவத் கிராமத்தின் கிரண் சன்னப்பா காமத், 29 சாதித்துள்ளார். அவரை நேரில் சென்று உறவினர்கள், கிராம மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

யு.பி.எஸ்.சி., தேர்வை எதிர்கொண்டது பற்றி, கிரண் சன்னப்பா காமத் கூறியதாவது:

என் தந்தை சன்னப்பா காமத்துக்கு, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான்கு முறை யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியும் தோல்வி அடைந்தார்.



அவரது ஆசையை நிறைவேற்ற நானும் யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத ஆரம்பித்தேன். ஐந்து முறை தோல்வி அடைந்தேன். ஆறாவது முயற்சியில் எனக்கு வெற்றி கிடைத்து உள்ளது.

இந்த தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைத்து உள்ளேன்.

முதல் மூன்று முயற்சியின் போது முழு நேரமாக படிக்க மட்டுமே செய்தேன்.

பின், கர்நாடக அரசின் பொதுப்பணி துறையில் உதவி இன்ஜினியர் வேலை கிடைத்ததும், படிப்புக்கு அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை.

கிடைத்த நேரத்தில் மட்டும் படித்தேன். நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது. வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்களை முழுமையாக பயன்படுத்தி கொண்டேன். என் மீதான அழுத்தத்தை குறைக்க, வேலையில் எனக்கு மூத்த அதிகாரி சுமலதா நிறைய உதவிகள் செய்தார். அவர் செய்த உதவியை எப்போதும் மறக்கவே மாட்டேன்.

எனக்கு என் குடும்பத்தினர் அளித்த ஆதரவு அற்புதமானது. ஐந்து முறை நான் தோல்வி அடைந்த போதிலும் பெற்றோரும், சகோதரியும் தைரியம் கொடுத்தனர். என் வெற்றிக்கு மனைவி லோச்சனாவும் ஒரு காரணம்.

என் படிப்பு களையும், அன்றாட வேலைகளையும் ஒருங்கிணைத்து கொடுத்தார். கர்நாடக கேடரை தேர்வு செய்து உள்ளேன். நமது மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி.

அதையும் தாண்டி நாட்டின் எந்த இடத்திலும் பணியாற்ற தயார். கடவுள் கொடுத்த இந்த பரிசை பொக்கிஷம் போன்று பாதுகாக்க உள்ளேன். பொதுப்பணி துறையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், உள்கட்டமைப்பு மேம்பாடு பற்றி தெரிந்து வைத்து உள்ளேன்.

யு.பி.எஸ்.சி., முழு வாழ்க்கையை மாற்றும் தேர்வு. இத்தேர்வில் வெற்றி பெற தவம் செய்ய வேண்டும். ஒரு சமூகத்தையை மாற்றும் சக்தி, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு உள்ளது. வடமாவட்டங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகுங்கள். நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். பொறுமை தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us