/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநகராட்சிகளுக்கு நிதி: காங்., அரசு பாரபட்சம்
/
மாநகராட்சிகளுக்கு நிதி: காங்., அரசு பாரபட்சம்
ADDED : ஜூலை 01, 2025 03:39 AM

ஹூப்பள்ளி: ''எதிர்க்கட்சி வசமுள்ள மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் காங்கிரஸ் அரசு பாரபட்சம் காட்டுகிறது,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக பா.ஜ., மாநிலத் தலைவர் தேர்தல் விரைவில் நடக்கும். ஹூப்பள்ளி - தார்வாட் மேயர், துணை மேயர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். பா.ஜ., வசம் உள்ள மாநகராட்சிகளுக்கு காங்கிரஸ் அரசு முறையாக நிதியை விடுவிப்பதில்லை.
காங்கிரஸ் அரசால், இந்திரா கேன்டீன்களுக்கு கூட நிதி ஒதுக்க முடியவில்லை. மாநில அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.
அமைச்சர் சந்தோஷ் லாட், ஹூப்பள்ளி - தார்வாட் பற்றி பேசுவதற்கு பதிலாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றியே அதிகம் பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.